சுடச்சுட

    

    சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

    By கோவில்பட்டி  |   Published on : 24th June 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி ஜோதிநகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜோதிநகர் வியாபாரிகள் சங்கத் தலைவர் கிறிஸ்துராஜா முன்னிலை வகித்தார்.  பிளஸ்2, பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு காவல் துறை சிறப்பு உதவி- ஆய்வாளர் ராமசாமி வழங்கினார்.  விழாவில், நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி, நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர் பொம்மியம்மாள், வழக்குரைஞர் செல்வம் ஆகியோர் பேசினர்.  நிகழ்ச்சியில், பேரமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிகளை சங்கச் செயலர் ஆரோக்கியசெல்வம் தொகுத்து வழங்கினார். அருள்ராஜ் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் தாயப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai