சுடச்சுட

  

  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமமுக சார்பில், மது ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் இம்மாதம் 27 மற்றும் 28ஆம் தேதி கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஒன்றியங்களில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

  வடக்கு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மு.ரவிகுமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் செல்வம், தூத்துக்குடி மாநகரச் செயலர் தேவபிரியன், மாவட்ட இணைச் செயலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல செயலர் அழகர்சாமி, மாநிலப் பொருளாளர் அய்யாத்துரைப்பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

  மாவட்ட இளைஞரணி செயலர் பாலமுருகன், கயத்தாறு ஒன்றிய செயலர் குட்டியப்பன், கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் சுப்புராஜ், ஒன்றிய இளைஞரணிச் செயலர் கனகராஜ், மாவட்டச் செயலர் முனியசாமி உள்பட வடக்கு மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

  மது ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு வரும் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனுக்கு கிளை உறுப்பினர்கள் சார்பில் வரவேற்பு அளிப்பது என்றும், கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட மேலஈரால் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கோவில்பட்டி ஒன்றிய இளைஞரணியைச் சேர்ந்த பெருமாள்சாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கோவில்பட்டி ஒன்றியச் செயலர் பா.அன்புராஜ் செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai