சுடச்சுட

  

  மத்திய அரசின் நேரு இளையோர் மையத்தின், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், சர்வதேச யோகா தின கருத்தரங்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, மனவளக் கலை குறித்து நாகராஜனும், பதஞ்சலி முனிவரின் யோகா கலைகள் குறித்து பகவத தாஸýம், யோகாசனங்களின் அவசியம் குறித்து தனலட்சுமியும் பேசினர். தொடர்ந்து, யோகாசனங்கள் குறித்து பல்வேறு தலைப்புகள் பேசப்பட்டு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சியில், நேரு இளையோர் மைய கணக்காளர் ராஜகோபால், வாழும் கலை மன்ற நிர்வாகி சங்கர், ஒருங்கிணைப்பாளர் முருகேசன், யோகா பயிற்றுநர்கள் கோபாலசாமி, கனகராஜ், தேசிய இளையோர் படை நிர்வாகி வைதேகி லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai