சுடச்சுட

    

    கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகர் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை பைக்குகள் மோதியதில் முதல் நிலை காவலர் பலத்த காயமடைந்தனர்.

    எட்டயபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வருபவர் ரவிசங்கர் (39). கோவில்பட்டி வள்ளுவர் நகரில் குடியிருந்து வரும் இவர், மோட்டார் சைக்கிளில் புதுரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகர் கோயில் அருகே வந்து கொண்டிருந்தாராம்.

    அப்போது எதிரே வந்த ஆலம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பொ.சமுத்திரக்கனி(53) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ரவிசங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாம். இதில், ரவிசங்கர் பலத்த காயமடைந்தார்.

    தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் காயமடைந்தவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai