சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி

    By திருச்செந்தூர்  |   Published on : 24th June 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

     இந்திய அரசு மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில், திருச்செந்தூர் வட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகள் 30 பேருக்கு முதல் கட்டமாக இலவச தையல் பயிற்சி தொடக்க விழா சமுதாயநல கூடத்தில் நடைபெற்றது. மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே.கென்னடி தலைமை வகித்தார். வழக்குரைஞர் அ.சதீஸ்பாலன், திருச்செந்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் சென்னை அலுவலர் ராஜசேகர் பங்கேற்று பயிற்சியை தொடங்கிவைத்தார். உதவி அலுவலர் ராம்தாஸ் பயிற்சி நோக்கம் பற்றி பேசினார். ஒருங்கிணைப்பாளர் பானுமதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai