சுடச்சுட

    

    மெஞ்ஞானபுரம் அருகே கார்-பைக் மோதல்: இருவர் காயம்

    By உடன்குடி  |   Published on : 24th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மெஞ்ஞானபுரம் அருகே காரும், பைக்கும் மோதிக் கொண்டதில் பைக்கில் வந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.

    நாசரேத் மாணிக்கவாசகபுரத்தைச் சேர்ந்தவர் மு.முருகேசன் (27). இவர், தனது உறவினர் செந்தூருடன் பைக்கில் நாசரேத்தில் இருந்து சாத்தான்குளத்துக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது சாத்தான்குளத்தில் இருந்து வந்த கார் தைலாபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது, பைக் மீது மோதியதாம்.

    இதில், பைக்கில் வந்த முருகேசன், செந்தூர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில், மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த திசையன்விளையைச் சேர்ந்த டே.ஜெபக்குமார் டேவிட்(39) என்பவரைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai