சுடச்சுட

  

  3ஆவது பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்

  By தூத்துக்குடி  |   Published on : 24th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 3 ஆவது பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை இரவுக்குள் வழக்கம்போல குடிநீர் விநியோகிக்க வாய்ப்பு உள்ளதாக தலைமைப் பொறியாளர் ராஜகோபால் தெரிவித்தார்.

  தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு தாமிரவருணி ஆற்றில் இருந்து வல்லநாடு பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர், குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் 3 ஆவது பைப் லைனில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

  கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடிகுளம் என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை திடீரென மற்றொரு இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.

  இதனால், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு ராட்சத ஜேசிபி இயந்திரங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் 25-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை இரவு முதல் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜகோபாலன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அவருடன் மாமன்ற உறுப்பினர்கள் கோல்டன், சகாயராஜ், மாரிமுத்து, முருகன், சரவணன், தனராஜ், மெஜிலா, சாந்தி, சந்திரா செல்லப்பா,  பெருமாள்தாய் மற்றும் அதிமுக இளைஞரணி நிர்வாகி ஏபிஆர் கவிஅரசு உள்ளிட்டோர் உடன் சென்று பணியை பார்வையிட்டனர்.

  இதுகுறித்து மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜகோபால் கூறுகையில், ஓடை பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஜேசிபி இயந்திரத்தை கொண்டுச் செல்ல முடியவில்லை. 25-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

  புதன்கிழமை காலைக்குள் உடைப்பு சரி செய்யப்பட்டு பம்பிங் செய்யப்படும். இதையடுத்து, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்கு புதன்கிழமை இரவு முதல் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai