சுடச்சுட

  

  அமலி நகர் அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

  By திருச்செந்தூர்  |   Published on : 25th June 2015 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செந்தூர் அமலி நகர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தல 41-வது ஆண்டு திருவிழா, செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  விழாவை முன்னிட்டு மாலை 5.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து கொடி பவனி புறப்பட்டு, முக்கிய வீதி வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தது. தொடர்ந்து மாலை 6.40 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் கொடியேற்றி, ஆலயத்தில் நடந்த திருப்பலியில் மறையுரையாற்றினார்.

  இதில் பங்குதந்தைகள் பெரியதாழை சேவியர் ஆல்வின், தூத்துக்குடி பிரதீப், ஜெய்கர், பிரதீபன், கிராசியஸ் மைக்கேல், சங்கீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா நாள்களில் தினமும் காலை 6.15 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. வருகின்ற ஜூலை 4-ஆம் தேதி மாலை 7 மணிக்கு பெரியதாழை பங்குத்தந்தை ஸ்டான் பர்னாந்து தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. 5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலியில், கல்லாமொழி மீனவர் சமூக கல்வி மைய இயக்குநர் மரியஜான் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறார்.

  ஏற்பாடுகளை அமலி நகர் பங்குத்தந்தை அன்றனி ஜெகதீசன் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai