Enable Javscript for better performance
அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பித்தோருக்கு ஜூன் 30இல் கலந்தாய்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பித்தோருக்கு ஜூன் 30இல் கலந்தாய்வு தொடக்கம்

    By தூத்துக்குடி  |   Published on : 25th June 2015 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர விண்ணப்பித்தோருக்கு ஜூன் 30 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகலாபுரம் மற்றும் வேப்பலோடை ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்  சேர்வதற்காக கடந்த 10 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    தகுதி உடையோருக்கு அழைப்பு அட்டைகள் அனுப்பப்பட்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அழைப்பு அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் இதனையே அழைப்பாகக் கருதி கலந்தாய்வுக்கு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கலந்தாய்வில் பங்கேற்போர் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றின் அசல் மற்றும் 3 நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10) மற்றும் சேர்க்கை கட்டணமாக ரூ.225 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளின் சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசை பிரிக்கப்பட்டு தேர்ச்சி செய்யப்படுவர்.

    எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியுடைய தொழிற்பிரிவுகளுக்கு ஜூன் 30 ஆம் தேதி காலை 8 மணி முதல் தரவரிசை 1 முதல் 200 வரை உள்ள (94 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை) நபர்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் தரவரிசை 201 முதல் 400 வரை உள்ள  (59.5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை) நபர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

    ஜூலை 1 ஆம் தேதி காலை 8 மணி முதல் தரவரிசை 401 முதல் 600 வரை உள்ள (49.5 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை) நபர்களுக்கும், பிற்பகல் 2  மணி முதல் தர வரிசை 601 முதல் 800 வரை உள்ள (41.5 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை) நபர்களுக்கும், 2 ஆம் தேதி காலை 8 மணி முதல் தரவரிசை 801 முதல் 970 வரை உள்ள (30.5 சதவீதத்துக்கு கீழ்) நபர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடைய தொழிற்பிரிவுகளுக்கு ஜூலை 2 ஆம் தேதி பிற்பகல் 2  மணி முதல் தர வரிசை 1 முதல் 200 வரை உள்ள (98 சதவீதம் முதல் 78 சதவீதம் வரை) நபர்களுக்கும், 3 ஆம் தேதி  காலை 8 மணி முதல் தரவரிசை 201 முதல் 400 வரை உள்ள (77.5 சதவீதம் முதல் 72.5 சதவீதம் வரை) நபர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

    அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் தர வரிசை 401 முதல் 600 வரை உள்ள (72 சதவீதம் முதல் 68.5 சதவீதம் வரை) நபர்களுக்கும், ஜூலை 4 ஆம் தேதி காலை 8 மணி முதல் தர வரிசை 601 முதல் 800 வரை உள்ள (68 சதவீதம் முதல் 63.5 சதவீதம் வரை) நபர்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் தர வரிசை 801 முதல் 1000 வரையுள்ள (63 சதவீதம் முதல் 60.5 சதவீதம் வரை) நபர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    ஜூலை 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் தரவரிசை 1001 முதல் 1200 வரையுள்ள (60 சதவீதம் முதல் 56.5 சதவீதம் வரை) நபர்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் தரவரிசை 1201 முதல் 1400 வரையுள்ள (56 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை) நபர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    ஜூலை 7 ஆம் தேதி காலை 8 மணி முதல் தரவரிசை 1401 முதல் 1600 வரையுள்ள (52.5 சதவீதம் முதல் 47.5 சதவீதம் வரை) நபர்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் தரவரிசை 1601 முதல் 1749 வரையுள்ள (47 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை) நபர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    கலந்தாய்வு நடைபெறும்போது தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இருக்கை நிலவரங்கள் கணினி உதவியுடன் வெண்திரையில் காட்டப்பட்டிருக்கும். மாணவர், மாணவிகள் தங்களுக்கு விருப்பமான தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவை தேர்ந்தெடுக்கலாம்.

    கலந்தாய்வு தேதியில் தவிர்க்க இயலாத காரணங்களால் வரத் தவறினால் தரவரிசையை இழக்க நேரிடும்.

    மேலும், விவரங்களுக்கு 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai