சுடச்சுட

  

  அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசளிப்பு

  By சாத்தான்குளம்  |   Published on : 25th June 2015 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்  எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சாயர்புரம் போப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

  விழாவுக்கு, ஏரல் சேர்மன் சுவாமி கோயில் பரம்பரை தக்கார் கருத்தபாண்டியன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் பத்மநாதன், மாவட்ட ஊராட்சிகளின் கூட்டமைப்புத் தலைவர்  பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட  கிராம வாழ் மக்கள் நலசங்கத் தலைவர் நயினார்குலசேகரன் வரவேற்றார்.

  பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜசெல்வன், உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ், ஸ்பிக் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் செந்தில் நாயகம்,  கட்டலான்குளம்  பள்ளித் தலைமை ஆசிரியர் நட்டாத்தி குமார், சமூக ஆர்வலர் ஜெயபாலன் ஆகியோர் பேசினர். சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 10, பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஆரோக்கிய நெல்சன், முத்துவேல் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

  மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

  மேலும் பரிசு வாங்க வந்த மாணவர், மாணவிகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஏரல் சேர்மன் சுவாமிகள் கோயில் பரம்பரை தக்கார் கருத்தபாண்டியன் சார்பில் தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

  இதில் சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ், சாலமோன் சந்தோஷ்ராஜ்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்  வில்சன் வெள்ளையா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai