சுடச்சுட

  

  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்: மீண்டும் வாக்கு எண்ணிக்கை

  By தூத்துக்குடி  |   Published on : 25th June 2015 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய 18 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஏற்கெனவே வெற்றிபெற்றவரே மீண்டும் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

  கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய 18 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த செல்லச்சாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த முனியம்மாள் பொன்ராஜை விட 88 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

  இந்நிலையில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் முனியம்மாள் பொன்ராஜ் வழக்குத் தொடர்ந்தார். இதைடுத்து நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் புதன்கிழமை மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

  அப்போது முன்பு வாங்கியதைவிட ஒரு வாக்கு மட்டும் குறைவாகப் பெற்ற செல்லச்சாமி 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

  மற்றொரு வழக்கு: இதேபோல் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் 4 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பால்ராஜ் வெற்றிபெற்ற நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட அந்தோணி தனுஷ்பாலன் மீண்டும் வாக்கு எண்ணிக்கை கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

  இதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கையை ஜூலை 15 ஆம் தேதி நடத்த மாவட்ட நீதிபதி ராஜசேகர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai