சுடச்சுட

  

  ஆனி உத்திரத்தை முன்னிட்டு, கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில், சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

  இதை முன்னிட்டு, கோவில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 9 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனையடுத்து 1008 சங்குகள் வைத்து கழுகாசலமூர்த்திக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

  இரவில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai