சுடச்சுட

  

  கோவில்பட்டி தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது

  By கோவில்பட்டி  |   Published on : 25th June 2015 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி நூற்பாலை தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

  கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த அப்பாசாமி மகன் சுரேன் என்ற ராமகிருஷ்ணன் (28). நூற்பாலை தொழிலாளியான இவர், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சுப்புசெல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சுரேன் மற்றும் அவரது சகோதரர் சந்திரகண்ணன் (32) ஆகிய இருவரும் பைக்கில் வக்கீல் தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவரையும் மிரட்டினர்.

  இதையடுத்து பைக்கை கீழே போட்டுவிட்டு வக்கீல் தெரு இந்திரா தோட்டம் அருகேயுள்ள வீட்டுக்குள் புகுந்த சுரேனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கிழக்கு காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது தோட்டிலோவன்பட்டி  பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த 2 இளைஞர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

  விசாரணையில், அவர்கள் இருவருக்கும் சுரேன் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

  மேலும், அந்த இளைஞர்கள் கோவில்பட்டி- பசுவந்தனை சாலை பாரதி நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் கூலித் தொழிலாளி பொன்முத்துப்பாண்டி (24) என்பதும், மற்றொருவர் நூற்பாலை தொழிலாளி பாரதி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த க.அந்தோணிராஜ்(24) என்பதும் தெரியவந்தது.

  இதையடுத்து போலீஸார் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.

  மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த பெ.முத்துலட்சுமி (33), அதே பகுதியைச் சேர்ந்த மு.ராஜபாண்டி (30) மற்றும் சுந்தரராஜ் ஆகிய மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

  இருவர் சரண்:இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த மு.சின்னராஜ் (28), கோவில்பட்டியையடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்த க.முத்துகுமார் (25) ஆகிய இருவரும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai