சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் 3ஆவது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By சாத்தான்குளம்  |   Published on : 25th June 2015 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டடம் அம்மாவட்ட ஆட்சியர் மதிவாணன் உத்தரவின்பேரில் அப்புறப்படுத்தப்பட்டதாம். மாவட்ட ஆட்சியரின் இச்செயலைக் கண்டித்தும், மீண்டும் கட்டடத்தை கட்ட வலியுறுத்தியும் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 3ஆவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் சுரேஷ்ராஜா தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு  ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டச் செயலர் மணிகண்டன், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்டச் செயலர் கோவிந்தன் ஆகியோர் பேசினர். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட இணைச் செயலர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai