Enable Javscript for better performance
சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

    By சாத்தான்குளம்,  |   Published on : 25th June 2015 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருள்தரும் தேவி அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேக கிரியாகால விழா புதன்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி காலை 5.30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் வருஷாபிஷேக கிரியைகள் தொடங்கின. தொடர்ந்து தேவதா அநுக்ஞை, எஜமான் வர்ணம், ஆச்சார்ய வர்ணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய ப்ராதனம், மஹா கணபதி ஹோமம், கலச பூஜை, ஜெபபாராயணம், மூர்த்தி துர்க்கா ஹோமம், பூர்ணாஹூதி, மஹா திரவிய அபிஷேகம், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விமான அபிஷேகம், மூலாலய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, அர்ச்சனை தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு பிரசன்னா பூஜை, தீபாராதனை நடைபெற்றன.

    தொடர்ந்து உற்சவ அம்மன் உள்வீதி, ஆலய வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சண்டிகேஸ்வரி பைரவ பூஜை, மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai