சுடச்சுட

    

    சீரான குடிநீர் கோரி தூத்துக்குடியில் காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    By தூத்துக்குடி  |   Published on : 25th June 2015 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி 37 ஆவது வார்டுக்குள்பட்ட அண்ணாநகர் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் அண்ணாநகர் பிரதான சாலையில் புதன்கிழமை திடீரென காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு சென்ற தென்பாகம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai