சுடச்சுட

  

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

  By கோவில்பட்டி  |   Published on : 25th June 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு, பேரமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ராஜா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை தலைவர் முத்துராஜ், லாலா பேக்கரி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கருப்பசாமி, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஞானதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில், அண்ணா பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெறுவதை முன்னிட்டு, தற்போது செயல்பட்டு வரும் கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து புறநகர் பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும்; இரவு 10 மணிக்கு மேல் அனைத்து புறநகர் பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தான் புறப்பட வேண்டும்; இளையரசனேந்தல் சுரங்கப்பாதையை ஒருவழிப்பாதை என அறிவிக்கப்பட்டிருப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில், சிறு உணவுப் பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் முத்துராஜா, பேரமைப்பின் வடக்கு மாவட்ட இணைச் செயலர் மோகன்ராஜ், சங்க ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் சமுத்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  பேரமைப்பின் வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai