தூத்துக்குடி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம்
By தூத்துக்குடி | Published on : 25th June 2015 01:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் மற்றும் முதலாமாண்டு மாணவர்-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார்.இதில், மாணவர்,மாணவிகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் செல்லிடப்பேசி வழியாக குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் பெற்றோருக்கு தெரிவிப்பது என்றும், கல்லூரி வளாகத்துக்குள் மாணவர், மாணவிகள் செல்லிடப்பேசியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டியதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிகழ் கல்வியாண்டுக்கான பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் தட்சிணாமூர்த்தி, செந்தூர்பாண்டியன், முரளிதரன், அசோக், சிவபாக்கியம் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.