சுடச்சுட

  

  தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

  By தூத்துக்குடி  |   Published on : 25th June 2015 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச் சாலையை பராமரிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  இதுகுறித்து அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் வெளியிட்ட அறிக்கை:

  தூத்துக்குடி- திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், இந்த சாலையின் நடுவே வளர்க்கப்பட்டு வரும் செடிகள் பராமரிக்கப்படாமல் காட்சியளிக்கின்றன.

  இதனால், இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

  மேலும், புதுக்கோட்டை அருகே தட்டப்பாறை விலக்கு பகுதியில் முன்பிருந்த சுங்கச்சாவடி அகற்றப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே சாலையை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai