சுடச்சுட

  

  ஆத்தூரில் உயர்பிறப்பு குறைப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

  ஆத்தூர் சி.சண்முகசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தூத்துக்குடி குடும்பநலம் துணை இயக்குநர் டாக்டர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார்.

  நிர்வாக அலுவலர் எஸ்.கந்தசாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணகுமார், ஆத்தூர் மருத்துவ அலுவலர் ராம்பிரசாத், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அழகு, சமுதாய சுகாதார செவிலியர் கீதா, சுகாதார ஆய்வாளர்கள் அனந்தகிருஷ்ணன், இளங்கோ, சங்கரசுப்பிரமணியன், உயற்பயிற்சி ஆசிரியர் ஜான்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  பின்னர் ஆத்தூர் நகரின் முக்கிய பகுதிகள் வழியே உயர்பிறப்பு குறைப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

  பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயகணேஷ் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai