Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடன்குடி வட்டார நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    புதிய கிளைச் செயலராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவிச் செயலராக நடராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், ராஜேஷ், சீனிவேல், முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  உடன்குடி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்; குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அருகே உள்ள அரசு மதுக்கடையை அகற்ற வேண்டும்; குலசேகரன்பட்டினத்தில் செயல்பட்டு வந்த பிரேத பரிசோதனை அறை, மீண்டும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், ஏஐடியூசி நகரத் தலைவர் விமலநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் பரமசிவன், ஒன்றியச் செயலர் ஆண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai