சுடச்சுட

  

  உடன்குடி அருகே பனை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்த மரநாயை வனஅலுவலர்கள் வியாழக்கிழமை பிடித்தனர்.

  உடன்குடி அருகே கொட்டங்காடு, நாராயணபுரம், இடைச்சிவிளை, கீ.லட்சுமிபுரம் பகுதிகளில் உள்ள பனை, தென்னை மரங்களை இரண்டு மரநாய்கள் பல மாதங்களாக சேதப்படுத்தி வந்தன.

  இந்நிலையில் கொட்டங்காட்டில் உள்ள ராகவன் என்பவரது வீட்டில் இரு மரநாய்கள் பதுங்கியிருப்பதாக புனித திருத்துவ ஆலய நிர்வாகி வசீகன் திருச்செந்தூர் வனச்சரக அதிகாரி லோக சுந்தரநாதனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் ரத்தினம், தர்மராஜ், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அருள்ராஜ், முத்துக்குமார் ஆகியோர் கொட்டங்காட்டிற்கு சென்று மரநாய்களை பிடிக்க முயற்சி செய்தனர். இதில் ஒரு மரநாய் மட்டும் பிடிபட்டது. பிடிபட்ட மரநாயை வனத்துறையினர் குதிரைமொழித் தேரிக்காட்டில் கொண்டு விட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai