சுடச்சுட

  

  எய்ட்ஸ் தடுப்புப் பணிகளை அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்படுத்த வேண்டும்

  By தூத்துக்குடி  |   Published on : 26th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்புப் பணிகளை அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

  ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டங்களை அனைத்து அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுத்துதல் மற்றும் ஹெச்ஐவி தொற்று உள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் கிடைக்க பெற செய்வதற்கான வாய்ப்புக்களை மேம்படுத்துதல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் பேசியது:

  ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் என்ற நோய் மருத்துவம் சார்ந்த பிரச்னை மட்டும் அல்லாது இது மருத்துவத்தை தாண்டி சமூக, பொருளாதார, உளவியல் ரீதியான தாக்கங்களை சமுதாயத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்கள் 2002 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  கடந்த 2002 ஆம் ஆண்டில் 0.31 சதவீதமாக இருந்த ஹெச்ஐவி தாக்கம் 2012-2013 ஆம் ஆண்டு  கணக்கெடுப்பின்படி 0.13 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தத் தாக்கம் தமிழகத்தில் 0.38 சதவீதமாக உள்ளது.  ஹெச்ஐவி  தொற்று உள்ள நபர்களுக்கு அரசு நல உதவி திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

  மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் ஹெச்ஐவியால் பாதிக்கப்ட்ட நபர்களுக்கு சென்று அடைவதற்கு வேண்டிய செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் ஹெச்ஐவி, எய்ட்ஸ் தடுப்புப் பணிகளை மருத்துவத்துறை மட்டும் அல்லாது மற்ற துறையினரும் இணைந்து செயலாற்றும்போது ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் இல்லாத நிலை ஏற்பட ஏதுவாகும் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உமா,  அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சாந்தி, மருத்துவர் குழந்தைராஜ், தூத்துக்குடி மாவட்ட ஹெச்ஐவி உள்ளோர் நலச்சங்கத்  தலைவர் திருநங்கை ரங்கீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai