சுடச்சுட

    

    கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க திமுக வலியுறுத்தல்

    By தூத்துக்குடி  |   Published on : 26th June 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார் சாகுபடிக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து தெற்கு மாவட்ட திமுக செயலர் என். பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:

    தூத்துக்குடி மாவட்டத்துக்கு கார் சாகுபடிக்கு அனுமதிக்கப்பட்டு, பாபநாசம் அணையில் இருந்து தினமும் 1500 கனஅடி வீதம் 143 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஆனால், தற்போது திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவோ 1050 கனஅடியாக உள்ளது. அதிலும், 500 கனஅடி தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு போக மீதம் 550 கனஅடி தண்ணீர்தான் விவசாயத்துக்கு வருகிறது. இதனால், தாமிரவருணி வடகால், தென்கால் பாசன விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், தண்ணீர் செல்லும் கால்வாய்கள் அனைத்தும் செடி, கொடிகள் சூழ்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இதனால், கடைசி குளமான கோரம்பள்ளம் குளம் வரை தண்ணீர் வருவது கடினமாக உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai