சுடச்சுட

    

    குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கம்

    By தூத்துக்குடி  |   Published on : 26th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    சைல்டுலைன் அமைப்பு சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தலைமை வகித்தார்.

    அமைப்பின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் அணில்குமார் கருத்தரங்கில் கலந்துகொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், சட்டத்தில் உள்ள கடுமையான பிரிவுகள் குறித்தும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவுகள் குறித்தும் பேசினார். இதில், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai