சுடச்சுட

    

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்று கோயிலில் ஆனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி ஆகியன நடைபெற்றன.  தொடர்ந்து, சங்கரலிங்க சுவாமி மற்றும் நடராஜ பெருமாளுக்கு பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில், கோயில் பொருளாளர் சுப்பிரமணி, செயலர் சுப்பையா உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai