சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

    By சாத்தான்குளம்  |   Published on : 26th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    சாத்தான்குளம், பழனியப்பபுரம் உப மின்நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் கேபிள் டிவி இணைப்புக்கான வயர்கள் அங்குள்ள மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ளன. இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு சாத்தான்குளம் உதவி செயற்பொறியாளர் ஆ. ராமக்கிளி தலைமை வகித்தார். இதில் சாத்தான்குளம் நகர்ப்புற உதவிப் பொறியாளர் பாக்கியராஜ், கிராமப்புற உதவிப் பொறியாளர் பேபி, பழனியப்பபுரம் உதவிப் பொறியாளர் சசிரேகா உள்ளிட்ட நகர, கிராம கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர்.

     இதில், கேபிள் வயர்களை மின்கம்பத்தில் கட்டுவதால் ஏற்படும் விபத்து அபாயம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 6 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai