சுடச்சுட

  

  சாத்தான்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி  தொடக்கம்

  By சாத்தான்குளம்  |   Published on : 26th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தான்குளத்தில்  ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான  கைப்பந்து போட்டிகள்  வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் போட்டியில் சாத்தான்குளம், முதலூர், சாயர்புரம், தூத்துக்குடி அணிகள் வெற்றி பெற்றன.

  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி,  யுஎஸ்ஏ அடோனாய் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து  6 ஆம் ஆண்டு  மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ரெடீமர்ஸ் கோப்பைக்கான கைப்பந்து போட்டிகள் சாத்தான்குளத்தில்  வியாழக்கிழமை  தொடங்கியது.

  போட்டியை சாத்தான்குளம்  சேகரகுரு செல்வின் சார்லஸ் ஜெபித்து தொடங்கி  வைத்தார். இதில் பள்ளித் தாளாளர் தே. தனராஜ், தலைமை ஆசிரியர் ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் போட்டியில் சாத்தான்குளம்  புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி  அணியும், உடன்குடி கிறிஸ்டியாநகரம் டிஎன்டிடிஏ அணியும் மோதின. இதில் சாத்தான்குளம் பள்ளி அணி வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி அணியும், தருவைகுளம் டிஎன்டிடிஏ மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் முதலூர் பள்ளி அணி வெற்றி பெற்றன. மாலையில் நடைபெற்ற போட்டியை யுஎஸ்ஏ அடோனாய் ஸ்போர்ட்ஸ் அகாதெமியைச் சேர்ந்த ஜேம்ஸ் வசந்த், பிரிதம்,சென்னை கஸ்டம் கால்பந்து அணி வீரர் ராபின்சார்லஸ் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  முதல் போட்டியில் தூத்துக்குடி கால்வெல்டு மேல்நிலைப்பள்ளி அணியும், பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் கால்வெல்டு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளியும், தூத்துக்குடி ரசால் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியதில் சாயர்புரம் அணி வெற்றி பெற்றது. போட்டி நடுவர்களாக கருப்பசாமி, பொன்ராஜ், பொன்னையா, ஸ்டீபன், சாமுவேல் தங்கையா ஆகியோர் செயல்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai