சுடச்சுட

    

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

    By சாத்தான்குளம்  |   Published on : 26th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் ஒன்றியத்தில்  காலியாக  உள்ள  அங்கன்வாடி மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர்பணியிடங்ளை நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் 91 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த அங்கன்வாடி மையங்களில் ஒரு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் என இருவர் பணியில் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் 65 மையங்களில் மட்டுமே அமைப்பாளர், உதவியாளர் பணிபுரிந்து வருகின்றனராம். மீதமுள்ள 26 மையங்களில் அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் இல்லாததால் அதன் அருகில் உள்ள மைய அமைப்பாளர்கள் காலியான இடத்தை கூடுதலாக கவனித்து வருகின்றனராம். இதனால் உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் சத்துணவு கொடுக்க முடியாமல் அமைப்பாளர்கள் மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து  அங்கன்வாடி மைய அமைப்பாளர் ஒருவர் கூறுகையில், காலியாக உள்ள பணியிடத்தை கூடுதலாக கவனிக்குமாறு கூறுவதால்  ஒரே இடத்தில்தான் மற்ற மையத்துக்கு  சமையல்  செய்து, கொண்டு செல்ல வேண்டி உள்ளது. மேலும் குழந்தைகளை உரிய முறையில் கவனிக்கவும் சிரமம் உண்டாகிறது. ஆதலால் காலியாக உள்ள இடங்களில் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

    ஆதலால் மாவட்ட நிர்வாகம் இதை கவனித்து சாத்தான்குளம் ஒன்றியத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியிடங்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai