சுடச்சுட

    

    சாத்தான்குளம் பள்ளியில் விழிப்புணர்வுப் பேரணி

    By சாத்தான்குளம்  |   Published on : 26th June 2015 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் தூய மிகாவேல்  மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    உயர்பிறப்பை குறைப்பதற்கான சிறப்பு செயல் திட்டத்தின்கீழ் வளர் இளம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பேரணி தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    பேரணிக்கு தலைமை ஆசிரியர் தேவராஜ் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். முதலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுவீட்லின் சசிதா முன்னிலை வகித்தார். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் விமலநாதன், வட்டார விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர்,  சமுதாய சுகாதார செவிலியர் வீரலட்சுமி ஆகியோர் பேசினர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், ஆசிரியர் அந்தோணி ஜோசப்ராஜ், சுகாதார செவிலியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் அந்தோணி சேவியர் ரெக்ஸ்ராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai