சுடச்சுட

    

    திருட்டு வழக்கில் இருவர் கைது: 26 பவுன் நகைகள் மீட்பு

    By தூத்துக்குடி  |   Published on : 26th June 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவரை தாளமுத்துநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    தூத்துக்குடி தாளமுத்துநகர், தபால் தந்தி காலனி மற்றும் சில பகுதிகளில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், தனிப்படை போலீஸார் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள திருவரங்கப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (32), ஜேசுநகரைச் சேர்ந்த அலெக்ஸ் (28) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர்கள் இருவர் மீதும் செய்துங்கநல்லூர், தூத்துக்குடி வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலையங்களில் 16 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், தாளமுத்துநகரில் இருவரும் சேர்ந்து இளைஞரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, இருவரையும் தாளமுத்துநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 26 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் பாராட்டு தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai