சுடச்சுட

  

  தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை

  By உடன்குடி  |   Published on : 26th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

  தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பல இடங்கள் குண்டும்,குழியுமாக உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இந்த சாலை வழியாகத்தான் வருகிறார்கள். இந்நிலையில் சாலை மோசமாக உள்ளதால் பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai