Enable Javscript for better performance
பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர் ரயில்வே போலீஸாரால் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர் ரயில்வே போலீஸாரால் மீட்பு

    By திருச்செந்தூர்  |   Published on : 26th June 2015 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவரை ரயில்வே போலீஸார் மீட்டனர்.

    திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் மகாபிரபு (15). இவர், திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் விடுதியில் இவருக்கும் சில மாணவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து மகாபிரபு வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் ஊர் செல்வதற்காக திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த ரயில்வே எஸ்.ஐ. தேவதாசன் ஜெயக்குமார், மகாபிரபுவிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai