சுடச்சுட

  

  புன்னக்காயல் பள்ளியில் பேரிடர் முதலுதவி பயிற்சி முகாம்

  By ஆறுமுகனேரி  |   Published on : 26th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.

  முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ரொகாலி சில்வா தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரன் சில்வா முன்னிலை வகித்தார். பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் செல்வராஜ் முதலுதவி குறித்துப் பேசினார். ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் சிறப்புரையாற்றினார். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்றுநர் செவ்வேல் முருகன் முதலுதவி பயிற்சி பட்டறை குறித்துப் பேசினார். முகாமில் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

  பேரிடர் மேலாண்மை திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயா, கிராம தொகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குட்டியம்மாள், மகாபாரதன்,  ஜெல்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai