Enable Javscript for better performance
மானியத்துடன் கூடிய கழிவறை கட்ட விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மானியத்துடன் கூடிய கழிவறை கட்ட விண்ணப்பிக்கலாம்

    By தூத்துக்குடி  |   Published on : 26th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கழிவறை கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில்  தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் கழிவறையை புதியதாக கட்டுவதற்கு அந்தப் பகுதியில் உள்ள கிராம வறுமை ஒழிப்புச்சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களை ஜூன் 29 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படும் இடங்களில் சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தனிநபர் இல்லக் கழிவறை கட்டுவதற்கு வேலை உத்தரவு வழங்கப்படும்.  ஒரு தனிநபர் இல்லக் கழிவறை கட்டுவதற்கு தலா ரூ.12,000 அரசு மானியம் வழங்கப்படும்.

    எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புதியதாக கழிவறை கட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai