சுடச்சுட

  

  கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தலில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

  மாவட்ட வருவாய் அலுவலரால் மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இளையரசனேந்தல் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை இந்த முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

  முகாமுக்கு ஊராட்சித் தலைவர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டாட்சியர் ஜோதி, பட்டா மாறுதல் 168, இலவச வீட்டுமனைப் பட்டா 57, முதியோர் உதவித்தொகை 129, பிற துறை மனுக்கள் 14, உழவர் அட்டை 23, குடும்ப அட்டை 8, இதர மனுக்கள் 16 என 415 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் பெற்றார். முகாமில், வருவாய் ஆய்வாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன், கருணாகரன், வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai