சுடச்சுட

  

  "கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்'

  By தூத்துக்குடி  |   Published on : 27th June 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறுபான்மை பிரிவு மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர்,  இஸ்லாமியர், புத்த மதத்தினர். சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர், மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16 ஆம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவர், மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  மாணவர், மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,  ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2015-16 ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.

  ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்,மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

  9 மற்றும் 10 வகுப்பு மாணவர், மாணவிகள் இணையதள முகவரியில் ஆன்லைன்  மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஊடுகதிர் படமாக்கி (ஸ்கேன்) பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

  கல்வி நிலையங்கள் மாணவர், மாணவிகளிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விவரங்களை அதற்கான கேட்புப் பட்டியலில் பதிந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஜூலை 25 ஆம் தேதிக்குள்ளும், 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் ஜூலை 31 ஆம் தேதிக்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai