சுடச்சுட

    

    குலசேகரன்பட்டினத்தில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    குலசேகரன்பட்டினம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ச.ஆஸ்வால்ட். இவர் பழைய மீன் வலைகள் வாங்கும் வியாபாரம் செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை நண்பகல் பைக்கில் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு மதிய உணவுக்கு வந்த அவர், பின்னர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லையாம்.

    இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai