சுடச்சுட

  

  கோவில்பட்டியில் கோட்டாட்சியரின் உத்தரவை மீறி இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சிற்றுந்துகளின் செயல்பாட்டைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.5 கோடியில் கட்டுமானப் பணி தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி நகருக்குள் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, கோட்டாட்சியர் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தப்படவில்லை எனக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செண்பகவல்லி அம்மன் கோயில் முன் தமாகாவினர் தேங்காய் உடைத்து சுவாமி, அம்பாளிடம் முறையிடும் நூதன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

  ஆர்ப்பாட்டத்துக்கு நகரப் பொறுப்பாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டாரப் பொறுப்பாளர் ஆழ்வார்சாமி, வழக்குரைஞர் கருப்பசாமி, மாவட்ட நிர்வாகிகள் ராசையா, வீரபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரசாக் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.

  இதில், கட்சி நிர்வாகிகள் சுப்புராஜ், இன்பராஜ், வீரபெருமாள், வேல்பாண்டியன், மதன், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தை உமாசங்கர் முடித்துவைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai