சுடச்சுட

    

    கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் 5 ஆவது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 27th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியிலும், சாத்தான்குளத்திலும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை 5ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்ட கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தை அகற்றிய திருவாரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், அக்கட்டடத்தை மீண்டும் கட்டித்தரக் கோரியும் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கோவில்பட்டி வட்டத் தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் வெங்கடேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் மாரிச்சாமி, வட்டத் துணைத் தலைவர் அமர்நாத், வட்டச் செயலர் முத்துராஜ், வட்டப் பொருளாளர் சுப்புராஜ், துணைச் செயலர் ஆதிலட்சுமி, சேகர், ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் சுரேஷ்ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு  ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டச் செயலர் மணிகண்டன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோபால், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பொன்சேகர், அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் ராஜேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெயபால், நில அளவையர் சங்கம் சிவக்குமார், சத்துணவு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் அந்தோணி தமிழ்செல்வன் ஆகியோர் விளக்கிப் பேசினர். சங்க வட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai