Enable Javscript for better performance
தாமரைமொழி பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    தாமரைமொழி பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம்

    By சாத்தான்குளம்  |   Published on : 27th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "தாமரைமொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தாமரைமொழி கிராம மக்கள் சார்பில் திமுக கிளைத் தலைவர் தங்கவேல், மாவட்ட  ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில், இரு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குகிறது. பள்ளி வளாகத்துக்குள் கழிவுநீர் தேங்குவதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்த பிறகும் கழிவுநீர் குழாயை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், இந்தப் பள்ளியை பார்வையிட்டு கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai