சுடச்சுட

    

    திருச்செந்தூர் ஸ்ரீ சபாபதி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

    By திருச்செந்தூர்  |   Published on : 27th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் ஸ்ரீ சபாபதி விநாயகர் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இவ்விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், தாராபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்ப பூஜையும், காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனையும், 10.30 மணிக்கு விமான கலசத்துக்கு அபிஷேகமும் நடைபெற்றன. இதையடுத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன.

    முன்னதாக சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்து வீதி வலம் வந்தனர். நண்பகலில் அன்னதானம் நடைபெற்றது. இரவு சபாபதி விநாயகர் உற்சவர் மூஷிக வாகன சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai