சுடச்சுட

    

    தீ விபத்தில் பாதிப்பு: 5 குடும்பங்களுக்கு தமாகா நிதியுதவி

    By ஆறுமுகனேரி  |   Published on : 27th June 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரியையடுத்த அடைக்கலாபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நேரிட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் பொறுப்பாளர்களான திருச்செந்தூர் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் எம்.சுந்தர்லிங்கம், மாநில பொதுக்குழு இரா.தங்கமணி, ஆழ்வார்திருநகரி வட்டாரப் பொறுப்பாளர் கீரனூர் முருகேசன், திருச்செந்தூர் நகரப் பொறுப்பாளர் வேலாயுத பெருமாள், கானம் நகரப் பொறுப்பாளர் தங்கவேல்ராஜ், தூத்துக்குடி ரவிகுமார், எடிசன், ஸ்டாலின், அடைக்கலாபுரம் வின்சென்ட், பவானி, பிரசாந்த், ஜெரி, ஜெகதீசன், கார்த்தீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai