சுடச்சுட

    

    பொது இடங்களில் புகைப்பிடித்த 100 பேருக்கு அபராதம் விதிப்பு

    By கோவில்பட்டி  |   Published on : 27th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் பொதுஇடங்களில் புகைப்பிடித்ததாக வியாழக்கிழமை 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் உத்தரவின் பேரில், கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா ஆலோசனைப்படி பொதுஇடங்களில் புகை பிடித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவில்பட்டியில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி தலைமையில், நல கல்வியாளர் பெருமாள்சாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அருணாசலம், கருணாநிதி, மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர்கள் அந்தோணிசாமி, செல்லையா, ரவிசந்திரன் உள்பட சுகாதாரப் பணிகள்  துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் தனித்தனி குழுக்களாக பிரித்து காவல் துறையினரின் உதவியுடன் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுஇடங்களில் புகை பிடித்த 100 பேருக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டு, புகை பிடித்தலால் ஏற்படும் நோய்கள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai