சுடச்சுட

    

    போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By தூத்துக்குடி  |   Published on : 27th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சார்பில், விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து புறப்பட்ட பேரணியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் து. நாகராஜன், தென்பாகம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பேரணி திருச்செந்தூர் சாலை, குரூஸ் பர்னாந்து சிலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

    பேரணியில் பங்கேற்ற மாணவர், மாணவிகள் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு குறித்த கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai