சுடச்சுட

  

  வாலிபால் போட்டி: தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி சாம்பியன்

  By சாத்தான்குளம்  |   Published on : 27th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தான்குளத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் கோப்பையை வென்றது.

  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி, யுஎஸ்ஏ அடோனாய் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து 6ஆம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பை வாலிபால் போட்டியை சாத்தான்குளத்தில் இருநாள்கள் நடத்தின. போட்டியை சாத்தான்குளம் சேகரகுரு செல்வின் சார்லஸ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். இதில், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் பள்ளி அணி, முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி அணி, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, ரசால் மேல்நிலைப்பள்ளி, பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாயர்புரம் போப்ஸ் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்டியாநகரம் டிஎன்டிடிஏ மேல்நிலைப்பள்ளி, தருவைகுளம் டிஎன்டிடிஏ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொண்டன.

  இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி, சாயர்புரம் போப்ஸ் மேல்நிலைப் பள்ளி அணியை 25-23, 23-25, 25-18 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.

  பரிசளிப்பு விழாவுக்கு பள்ளித் தாளாளர் தே.தனராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஞானசேகர் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் அதனாசீஸ் வரவேற்றார். வெற்றிபெற்ற கால்டுவெல் அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பை, சான்றிதழை சேகரகுரு செல்வின் சார்லஸ் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai