சுடச்சுட

  

  விலையில்லா பொருள்கள் வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

  By தூத்துக்குடி  |   Published on : 27th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் அரசின் விலையில்லா பொருள்கள் வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது .

  தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 53 ஆவது வார்டு பகுதிகளான முத்தையாபுரம் வடக்கு தெரு, வரதவிநாயகர் கோயில் தெரு, முனியசாமி கோயில் தெரு, கீழத் தெரு, பெரியார் நகர், முஸ்லிம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் கூலித்தொழிலாளர்கள். இம்மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை இதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்களுக்கான இலவசத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் புறநகர்க் குழு உறுப்பினர் பி. ராஜா தலைமையில் செயலர் செ.ஆனந்த், புறநகர்க் குழு உறுப்பினர் டேனியல், மாவட்டச் செயலர் எம்.எஸ். முத்து, நிர்வாகிகள் ரஞ்சித்குமார், விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai