சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியை தொடங்காவிட்டால் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ

    By தூத்துக்குடி  |   Published on : 27th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணியை உடனே தொடங்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றார் எஸ்.டி.பி.ஐ.  மாநிலத் தலைவர் தெகலான் பாகவி.

    இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

     மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற ஓராண்டு காலத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தவித்து வருகிறது. பாஜக ஊழலுக்கு எதிரானவர்களானால், புகார் கூறப்பட்டுள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணியை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

    இல்லையெனில், மக்களை திரட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், ஆறுமுகனேரியில் இயங்கும் தனியார் ரசாயன ஆலையைக் கண்டித்து சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை ஆகஸ்ட் 21 ஆம் தேதி முற்றுகையிட உள்ளோம் என்றார் அவர்.

     பேட்டியின்போது, மாநிலச் செயலர் உஸ்மான் கான், மாவட்டத் தலைவர் அஸ்ரப் பைஜி, மாவட்டச் செயலர் முகமது தாஹீர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai