சுடச்சுட

  

  ஸ்ரீவைகுண்டம்-தூத்துக்குடிக்கு பழுதான பேருந்துகள் இயக்கம்: மக்கள் அவதி

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 27th June 2015 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பெருங்குளம், நட்டாத்தி வழியாக தூத்துக்குடிக்கு பழுதடைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். எனவே, தரமான பேருந்துகளை இயக்க வேண்டும்' என கிராம வாழ் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து கிராம வாழ் நலச் சங்க அமைப்பாளர் நயினார் குலசேகரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

  ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பெருங்குளம், நட்டாத்தி வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த தரமான அரசுப் பேருந்துக்களை வேறு வழித்தடத்துக்கு மாற்றியுள்ளனர்.

  அதேவேளையில், இந்த வழித்தடத்தில் பழுதடைந்துள்ள பேருந்துகளை இயக்குகின்றனர்.

  சாலைகளும் குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளதால், பழுதடைந்துள்ள பேருந்துகளால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் அலுவலகப் பணியாளர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரும்  குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

  எனவே, இந்த வழித்தடத்தில் தரமான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai