சுடச்சுட

    

    ஆத்தூர் பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்த 39 பேருக்கு அபராதம்

    By ஆறுமுகனேரி  |   Published on : 28th June 2015 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூர் பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்ததாக 39 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

     ஆத்தூர் மற்றும் தெற்கு ஆத்தூர் பகுதிகளில் மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குநர் மதுரம் பிரைட்டன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் வடிவேல், கணேசன், சுப்பிரமணியன், ஆழ்வார் அப்பன், சூரிய நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள், ஆனந்தகிருஷ்ணன், ஆனந்தன், இளங்கோவன், சங்கரசுப்பிரமணியன், தியாகராஜன், பவுல் ஆபிரகாம், சுடலைமாடன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தான் ஆகியோர் இரு குழுக்களாக பிரிந்து பேரூந்து நிலையம் நகரப்பகுதிகள், தெற்கு ஆத்தூர், பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகை பிடித்த 39 நபர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் புகையிலை விழிப்புணர்வு இல்லாத கடைகளுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai